2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ரஜினி, அஜித் பாணியில் விஜய் ‘தளபதி 65’ கதை இதுவா?

Editorial   / 2020 ஜனவரி 15 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயின் அடுத்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினிகாந்த், அஜித் மற்றும் விஜய் ஆகியோர் ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர். 

உணர்வுப்பூர்வமான குடும்ப கதைகளை அவர்கள் அதிகம் தேர்வு செய்வதில்லை. அதிலிருந்து விலகி இருக்கிறார்கள். 

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் 'விஸ்வாசம்' ஒரு கிராமப்புற குடும்ப பின்னணியை கொண்ட படமாக இருந்தது. 

இதற்குப் பார்வையாளர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்தது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஆகவேதான் ரஜினிகாந்த் தனது 168ஆவது திரைப்படத்திற்காக 'விஸ்வாசம்' இயக்குநர் சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்தார். 

ரஜினியுடன் இவர் இணைந்து எடுத்து வரும் இந்தப் படம் கிராம பின்னணியில், ஒரு பொழுதுபோக்கு குடும்ப திரைப்படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இப்போது ரஜினிகாந்த் பாணியை விஜய் பின்பற்ற தொடங்கி உள்ளதாக தெரிகிறது. ’மாஸ்டர்’ படத்திற்குப் பின் விஜய் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்து சில தகவல்கள் இப்போது கசிய தொடங்கி உள்ளன. 

அவர் தனது அடுத்த இயக்குநராக பாண்டிராஜை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கிராமப்புற கதைகளை இயக்குவதில் கைதேர்ந்தவர் பாண்டிராஜ். 

ஆகவே அவர் விஜயுடன் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுவதால், அது குடும்பக் கதையாகவே இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாண்டிராஜ் குடும்பக் கதை பின்புலத்தை வைத்து இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' மற்றும் 'நம்ம வீட்டு பிள்ளை' ஆகிய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. 

இவர்தான் விஜய்யின் 65வது படத்தை இயக்கப்போகிறார் என்றால் அது நிச்சயம் இந்தப் பாணியில்தான் இருக்கும்.

விஜய் தற்போது அவரது 64ஆவது படமான 'மாஸ்டர்' படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. 

'மாஸ்டர்' படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் தனது 65ஆவது படம் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X