2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விஜய் என்ன தீவிரவாதியா ?

Editorial   / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் என்ன தீவிரவாதியா என்று விஜய் ரசிகர் மன்றத்தின் மாநில செயலாளர் ரவி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர். 

பிகில் திரைப்படத்துக்கு வாங்கிய சம்பளம் தொடர்பாக விஜய் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. 

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வந்த இடத்திற்கே சென்று விஜயிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் பின்னர் அவரை காரில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இது குறித்து பேட்டியளித்த விஜய் ரசிகர் மன்ற மாநில செயலாளர் ரவி ராஜா, “ தமிழ் சினிமாவில், மக்களுக்கு இலவச மருத்துவம் கிடைக்க வேண்டும் என்று மெர்சல் படத்தில் நடித்தார்.

விவசாயிகளுக்காக கத்தி படத்திலும், பெண்களுக்காக பிகில் படத்திலும், தேச பற்றுக்காக துப்பாக்கி படத்திலும் விஜய் நடித்துள்ளார். 

இந்த நிலையில், ஒரு தீவிரவாதியை நடத்துவது போல் படப்பிடிப்புதளத்திற்கு சென்று அவரை அழைத்து வந்து விசாரிப்பது ஏன் ?"

மேலும் தொடர்ந்த ரவி ராஜா, “அவர் என்ன நித்யானந்தாவா? விஜய் மல்லையாவா?. இது போன்ற விசாரணை வேறு எந்த நடிகருக்காவது நடைபெற்றுள்ளதா? விஜய் வாங்கிய பணத்திற்கு முறையாக வரி கட்டி வருகிறார். மத்திய அரசின் இந்த செயல் எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

5ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை 264 பேரின் படிப்பு செலவை முழுவதுமாக ஏற்று படிக்க வைத்து வருகிறார். 

இந்த நிலையில் வருமான வரி துறையினரின் செயல் எங்களுக்கு மன உளைச்சலை கொடுத்துள்ளது. அனைத்து இடங்களில் இருந்தும் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். 

ஆனால் நாங்கள் பொறுமையாக இருக்கும்படி ரசிகர்களிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்" என்றார் அவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .