2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த திரையுலகினர்

Editorial   / 2017 ஒக்டோபர் 22 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு தடைகளை தாண்டி நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளிவந்துள்ளது. ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த கருத்துக்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜ.க வினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மெர்சல் படத்துக்கு ஆதரவாக திரையுலகினர் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

கமல்ஹாசன்

ஒரு முறை தணிக்கை செய்யப்பட்ட மெர்சல் திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் விமர்சிப்பவர்களை அடக்க நினைக்காதீர்கள் என்றும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரவிந்த் சாமி

ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரி விதிப்புகளில் தங்களின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அரசை அவர்கள் கேள்வி கேட்பது எப்படி தவறாகும் என நடிகர் அரவிந்த் சாமி குறிப்பிட்டுள்ளார்.

குஷ்பு

பாஜக தற்போது தலைநகரம் படத்தில் வரும் வடிவேலு போல இருக்கிறது பில்டிங் ஸ்ட்ராஸ் பேஸ்மென்ட் வீக் என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.

பி.சி.ஸ்ரீராம்

மெர்சல் பட விவகாரத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுவதாக திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீப்ரியா

உலக அளவில் பேசப்படும் வசனத்தை திரைப்பட வசனகர்த்தா எழுதி தந்து அதை நடிகர் பேசுகிறார். இதில் விளக்கம் கேட்பது நியாயமாக இருக்காது என்று நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

காயத்ரி ரகுராம்

திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் வசனத்தை எழுதுவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். நடிகர் மீது குறை சொல்ல கூடாது. மெர்சல் படம் தெளிவாக தணிக்கை செய்யப்பட்டது என நடிகை காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்

முழு கருத்து சுதந்திரமே மிக சிறந்த ஜனநாயகம். இந்தியா மிகச் சிறந்த ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொண்டிருக்கிறேன் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பதிவு செய்துள்ளார்.

கரு.பழனியப்பன்

ஜோசப் விஜய், ஜுனைத், ஜமீலா, ஜனநாதன், ஜக்கம்மா என எல்லோரும் சேர்ந்திருப்பது தானே இந்தியா. இல்லையெனில் சொல்லிவிடு நாங்கள் தமிழர்களாய் வாழ்வோம் என்று இயக்குநர் கரு.பழனியப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி

அரசாங்கம், அரசியல் வாதிகள், கொள்கைகள், திரைப்படங்கள், என மக்கள் தொடர்புடைய அனைத்தும் கேள்வி கேட்கப்படும். விமர்சனம் செய்யப்படும். அதை தடுத்து நிறுத்த நினைப்பது வெட்கக்கேடாகும் என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .