டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு வயது 135
15-03-2012 01:05 PM
Comments - 0       Views - 851

கிரிக்கெட் போட்டிகளின் பிரதான வகையான டெஸ்ட் போட்டி ஆரம்பித்து இன்றுடன் 135 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது. 1877ஆம் ஆண்டு இதேபோன்ற மார்ச் 15ஆம் திகதி அனைத்து இங்கிலாந்து அணிக்கும், நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியப் பிராந்தியங்கள் இணைந்த அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியே முதலாவது டெஸ்ட் போட்டியாகக் கருதப்படுகிறது.

அனைத்து இங்கிலாந்து அணி பின்னர் இங்கிலாந்து அணி எனவும், நியூ சௌத் வேல்ஸ், விக்டோரிய பிராந்தியங்கள் இணைந்த அணி பின்னர் அவுஸ்ரேலியா எனவும் அழைக்கப்பட்டு அப்போட்டிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது.

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் அவுஸ்ரேலிய அணி - இங்கிலாந்து அணியை 45 ஓட்டங்களால் தோல்வியடையச் செய்திருந்தது.

5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி என வரையறுக்கப்படாது எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படாத நாட்களைக் கொண்ட போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி முதல் இனிங்ஸ் இல் 245 ஓட்டங்களையும், இங்கிலாந்து அணி 196 ஓட்டங்களையும் பெற, அவுஸ்ரேலிய தனது பின்னர் 104 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து அணிக்கு 154 ஓட்டங்களை இலக்காக வழங்கியது. எனினும் இங்கிலாந்து அணி 108 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 45 ஓட்டங்களால் தோல்வியைச் சந்தித்தது.

நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் டெஸ்ட் போட்டி, டெஸ்ட் வரலாற்றின் 2036ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. (க்ரிஷ்)

"டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு வயது 135" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty