2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐந்து வருட கடூழிய சிறை

Editorial   / 2018 ஜூலை 20 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் பெற்ற குற்றத்துக்காக, அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் செயலாளருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் கடுமையான உழைப்புடன் கூடிய 5 வருட கடூழிய சிறைத் தண்டணை விதித்து, நேற்று (19) தீர்ப்பளித்துள்ளது.   

அக்குணை பிரதேச சபையின் முன்னாள் செயலாளரான மொஹொமட் ஹனீபா மொஹொமட் நியாஸ் என்பவருக்கே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலத்துங்க, மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளார்.  

கடந்த 2013ஆம் ஆண்டு, அக்குறணை பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியில், கற்குவாறி ஒன்றுக்கு வெடிப்பொருட்களைக் கொண்டுச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக, நபரொருவரிடமிருந்து 50ஆயிரம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற குற்றத்துக்காகவே, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மேற்படி  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   

அத்துடன் குற்றவாளிக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், இலஞ்சமாக பெற்றுக்கொண்ட 50,000 ரூபாய் பணத்தை, மீளப் பெறுவதற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

மேற்படி உறுப்பினர் இலஞ்சம் பெறுவதற்கு உதவினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட அக்குறணை பிரதேச சபையின் அலுவலக உதவியாளரான மொஹொமட் அமீர் அஸ்வர் அலி என்பவருக்கும், ஏற்கெனவே தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே, குறித்த பிரதேச சபையின் உறுப்பினருக்கு, நேற்று (19) சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X