2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முன்னாள் தலைவருக்கு கடூழிய சிறை

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

அநுராதபுரம், ரம்பெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரணில் மாதவ கமல் கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், அவரைக் குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, நேற்று (03) தீர்ப்பளித்தது.

தென்கொரியாவுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, இளைஞரொருவரிடம் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றார் என்ற சந்தேகத்தில், மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ், இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால், அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில், வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.  

இந்த வழக்கின் தீர்ப்பு, நேற்றையதினம் அறிவிக்கப்படும் என உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, தீர்ப்பை வாசித்தார்.  

முதலாவது குற்றத்துக்கு 5 வருட வேலையுடன் கூடிய கடூழிய சிறைத் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்ததுடன், அபராதத்தைச் செலுத்தத் தவறின் ஒருவருட சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.   இரண்டாவது, குற்றத்துக்கு 4 வருட சிறைத் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்ததுடன், அபராதத்தைச் செலுத்தத் தவறின் ஒருவருட சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும் மூன்றாவது, குற்றத்துக்கு 4 வருட சிறைத் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்ததுடன், அபராதத்தைச் செலுத்தத் தவறின் ஒருவருட சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .