2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

போலி ஆவணங்கள் மூலம் வாகனங்களை விற்றவர்கள் கைது

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 31 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகனங்களை கூலிக்குப் பெற்று போலி ஆவணங்களைத் தயாரித்து அதனை விற்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த மூவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேல்மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (30) மாலை 2.10 மணியளவில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு பொரலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து இவர்கள் இதுவரை 7 கார்கள், 4 வான்களை இவ்வாறு விற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 42, 40 மற்றும் 26 வயதானவர்கள் என்றும், இவர்கள் தர்காநகர், அளுத்கம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் (31) புதுக்கடை இலக்கம் 2 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொரலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .