2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கடன் தருவதாக மக்களை ஏமாற்றிய நபர் கைது

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 19 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆடு,மாடுகள் வளர்ப்பதற்கு கடன் தருவதாக தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் வவுனியாவில் பொலிஸாரினால் நேற்று (18) இரவு 7 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா -கண்டி வீதியில் அமைந்துள்ள லங்கா பாம்ஸ் என்ட் பிஷரிஸ் என்னும் பெயரில் நடத்தப்பட்டு வந்த நிறுவனம் ஊடாகவே இந்த நிதி மோசடி இடம்பெற்று வந்துள்ளது.

வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களிடம் ஆடு, மாடுகள் வளர்ப்பு மற்றும் விவசாய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு கடன் வழங்கப்படுவதாக தெரிவித்தே  சந்தேகநபர் பண மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இதற்கென இலட்சக் கணக்கில் கடன் வழங்கப்படும் எனவும், வழங்கப்படவுள்ள கடனில் 10 வீதத்தினை குறித்த நிறுவனத்திற்கு மக்கள் செலுத்த வேண்டும் எனவும் சந்தேகநபர் அறிவித்தமைக்கு அமைய பணம் செலுத்தப்பட்டும்,தமக்கான கடனை வழங்கவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைபாடு அளிக்கப்பட்டதையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு சந்தேகநபருக்கு எதிராக 50 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா-பூந்தோட்டத்தைச் சேர்ந்த 38 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர் இன்றைய தினம் (19) வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X