2019 டிசெம்பர் 16, திங்கட்கிழமை

கொம்பனித்தெருவில் ஒருவர் கொலை; ஐவர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொம்பனித்தெரு, முத்தைய்யா வீதியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அல்கந்தவல, ராகலவெல, பாயகல பகுதியைச் சேர்ந்த, 47 வயதுடைய ஒருவரே இன்று அதிகாலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு தரப்பினருக்கு இடையிலான முரண்பாடுகளை அடுத்து, இன்று அதிகாலை 12.30 மணியளவில் குறித்த நபர், சிலரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .