மனைவியைக் கொன்றுவிட்டு கணவனும் உயிரை மாய்த்தார்

தன்னுடைய மனைவியை, பொல்லால் தாக்கிப் படுகொலைசெய்துவிட்டு, அவருடைய கணவன், தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார்.   

இந்த சம்பவம், ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரலியவத்த பிரதேசத்தில், செவ்வாய்க்கிழமை மாலை 4:10க்கு இடம்பெற்றுள்ளது.

மனைவி​யை தன்னுடைய வீட்டின் அறைக்குள் வைத்துப் படுகொலைசெய்த குறித்த நபர், அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள லயன் அறையிலேயே, அவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.  

மனைவியான நி​ரோஷா குமாரி (வயது 34) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய கணவனான நுவன் ரணசிங்க( வயது 35) என்பவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.  இவ்விருவரும் ருவன்வெல்ல மொரியவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று, ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.   

சடலங்கள் இரண்டும், கரவனெல்ல வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பொலிஸார், இருவருக்கும் இடையில் நீண்டநாட்களாக நிலவிவந்த குடும்ப பிரச்சினை​யே இந்தச் சம்பவத்துக்கு காரணமென ஆரம்பவிசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.    


மனைவியைக் கொன்றுவிட்டு கணவனும் உயிரை மாய்த்தார்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.