2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

11 கிலோகிராம் தங்கம் கடத்திய இருவர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 03 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஸீன் ரஸ்மின், முஹம்மது முஸப்பிர்

கற்பிட்டி- குடாவ கடற்பரப்பில் சட்டவிரோதமாக தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட இருவர் நேற்று  (02)  அதிகாலை கற்பிட்டி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இரு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 86,295,000 ரூபாய் பெறுமதியான 11 கிலோ 506 கிராம் நிறையுள்ள தங்க பிஸ்கட்கள் மற்றும், சந்தேக நபர்கள் பயணிப்பதற்கு பயன்படுத்தியதாக ௯றப்படும் படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் பயணித்த குறித்த படகை கடற்படையினர் சோதனை செய்த பேதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு கொண்டு செல்லும் நோக்கில் குறித்த தங்க பிஸ்கட்களை சந்தேக நபர்கள், படகு மூலம் கொண்டு செல்ல முற்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



கடந்த வருடத்தில் மாத்திரம் சட்டவிரோதமாக இந்நாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட சுமார் 62 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X