.
ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014

காணாமல் போன முதியவரின் சடலம் மீட்பு

(ஆகில் அஹமட்)

இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்ததாகத் தெரிவிக்கப்படும் வயோதிபரொருவரின் சடலம் தலாவ நவஹங்குரங்கெத்த விகாரைக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியிலிருந்து இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
   
தலாவ நவஹங்குரங்கெத்த பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான எச்.எம்.கருணாரத்ன என்பவரது சடலமே மீட்கப்பட்டது.

கடந்த 14ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்த  இவரது சடலத்தை கண்ட பிரதேசவாசியொருவர், பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து இச்சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

தம்புத்தேகம நீதவானின் உத்தரவுக்கமைய அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டி.எல்.வைத்தியரத்ன பிரேத பரிசோதனையை நடத்தினார்.  

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Views: 1032

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.