2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை

UPDATE - ஹெரோய்னுடன் கைதான பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆனமடுவ  - புத்தளம் வீதியில் தோனிகல பகுதியில் வைத்து ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினரால்  குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து 700 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த போதைபொருளுடன் ஓட்டோவில் பயணித்த நிலையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருவலகஸ்வெவ பிரதேச சபையின் உறுப்பினரான 28 வயதுடைய குறித்த சந்தேக நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த நபரை ஓகஸ்ட் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஆனமடுவ நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .