2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய விசாரணைகள் ஆரம்பம்

Editorial   / 2018 டிசெம்பர் 25 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில், தென்மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் மாத்தறை, தங்காலை பகுதிக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் ​நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் பூஜத் ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

தங்காலை- குடாவெல்ல பிரதேசத்திலுள்ள மீன்பிடித் துறைமுகத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 7.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்களென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு மீனவர் குழுக்களிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்தச் சம்பவத்துக்கு காரண​மென்றும், இச்சம்பவத்தில் காயமடைந்த ஐவர் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .