2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரமீத்துக்கு சரீரப் பிணை

Editorial   / 2018 மார்ச் 14 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமீத் ரம்புக்வெல, 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.   

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.  

இந்தச் சம்பவம், நாவல- நாரஹேன்பிட்டிய பகுதியில் கடந்த 9ஆம் திகதி இரவு இடம்பெற்றது.   அவர், கொழும்பு மேலதிக நீதவான் ரங்க கலன்சூரிய, முன்னிலையில் நேற்றையதினம் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போதே, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும், தன்மீது சுமத்தப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுகளிலும் தான் நிரபராதியென, ரமீத் ரம்புக்வெல, நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.   

அத்துடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்துக்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  
குறித்த வழக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் விசாரணைக்கு எடுத்துக்​கொள்ளப்படவுள்ளது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .