2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கார்ட்டூன் உருவங்களில் கைப்பைகள் அறிமுகம்

Kogilavani   / 2014 மே 07 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}



கார்ட்டூன் உருவங்களிலான நவநாகரீக கைப்பைகள் பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரிகா லின் மற்றும் சாய் சூ என்பவர்களே இக்கைப்பைகளை தயாரித்துள்ளனர்.

கைப்பபை, தோல்ப்பை, குரொஸ் பை, முதுகில் கொழுவும் பை, காசுப்பை, லாப்டாப் பை, ஐ பேட் பை போன்ற பைகள் இவ்வாறு கார்ட்டூன் உருவங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இப்பையை கையில் தொங்கவிட்டுக்கொண்டு பாதையில் செல்லும் போது இது உண்மையான பையா அல்லது வேறு எதுவுமாக என்று சந்தேகிக்கும் படியாக அமைந்துள்ளது.

நாம் விசித்திரமான வேடிக்கையான பொருட்களை சேர்ப்பதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றோம். இவ்வாறான புதிய வடிவமைப்புக்கள் தினமும் எங்களை உட்சாகத்துடன் வைத்துகொள்கின்றது என அந்நாட்டு பெண்கள் தெரிவித்துள்ளனர். 

ஒரு நாள் மாலை நண்பர்களுடன்  உரையாடிக்கொண்டிருக்கையில் அனைவரும் தங்களது கனவு கைப்பைகள் பற்றி பேசிக்கொண்டிருந்Nதூம். அப்போது கையில் வரையப்பட்ட ஒரு முப்பரிணாம உருவத்தை போல ஒரு ஆச்சரிப்படக்கூடிய அளவு பையொன்று இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் நண்பர் குழுக்களுக்கிடையே வந்துள்ளது.

அதன் பின்னரே இவ்வாறான பையை வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

மக்களை குழப்புவது என்றால் அது மிகவும் பிடிக்கும். அதைவிட இந்த பையை காட்டியவுடன் குழம்பிப்போய் இது உண்மையான பையென்று தெரிந்து கொண்டதன் பின்னர்சத்தமிட்டு சிரிப்பார்கள். அது எங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்  என்று இதனை வடிவமைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கைப்பைகளுக்கு 'ஜம்ப் ப்ரொம் பேப்பர்' என்று பெயர் சூட்டியுள்ளனர்.

2010ஆம் ஆண்டு சிறியதொரு தாயாரிப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பையானது தற்போது உலகலாவிய ரீதியில் 25 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன.

தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த பையயானது லன்டனில் சாடவி காலரி எனும் கடையில் விற்பனை செய்யப்படுகின்றதாம்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .