2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'PRO உடன் ஒரு மாலைநேரம்'

A.P.Mathan   / 2013 நவம்பர் 12 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் ஹேமாஸ் மனுஃபக்ட்சரிங் நிறுவனமானது, வளரும் மற்றும் இளம் நிபுணத்துவ ஆண்களுக்கான Eau De Toilette ஸ்பிறே, ஹெயார் ஜெல் மற்றும் டியோட்ரண்ட் பொடி ஸ்பிறே போன்ற பல புதிய வகைகளை அறிமுகப்படுத்துவதுடன், அதன் ஆண்கள் அழகை மேம்படுத்தும் PRO Sport வர்த்தகநாமத்தினை மீள் அறிமுகம் செய்துள்ளது.
 
90ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஹேமாஸ் நிறுவனத்தின் மூலம் PRO Sport தயாரிப்புகள் கொலோன் ஸ்ப்ளாஷ், after shave, டல்க், ஹெயார் ஜெல் மற்றும் ஹெயார் கிறீம் ஆகியன அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. அக் காலப்பகுதியில் இத் தயாரிப்புகள் அனைத்தும் விளையாட்டை மையப்படுத்தி அமைந்திருந்தன.
 
இந்த மீள் அறிமுகத்துடன், Pசுழு வர்த்தகநாமத்தின் மூலம் சர்வதேச வாழ்க்கைமுறை நடைமுறைகள் மற்றும் தற்போதைய தலைமுறையினரின் பேஷன் கேள்வி இரசணைகளுக்கு ஏற்ப, ஆண்கள் அழகை மேம்படுத்தும் தயாரிப்புகளை புதிய பரிணாமத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
இந் நிகழ்வில் புதிய PRO வர்த்தகநாம அடையாளத்தை ஹேமாஸ் மனுஃபக்டரிங் நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாக குழுவினர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ரோய் ஜோசப் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். ரோய் ஜோசப் கருத்து தெரிவிக்கையில், 'இந்த PRO மீள் அறிமுகத்தின் மூலம் இலங்கையின் இளம் ஆடவர்களுக்கு தனிநபர் அழகை மேம்படுத்தும் புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இளம் ஆடவர் ஒருவர் தனது இலக்கினை வெற்றி கொள்வதில் தன்னம்பிக்கை மிக முக்கிய பங்காற்றுகிறது. அழகை மெருகேற்றிக் கொள்வதானது நிச்சயமாக இந்த போட்டிமிக்க உலகில் அவரின் இலக்கினை விரைவாக வெற்றி கொள்ள வழிவகுக்கும்' என்றார். மேலும் அவர் கூறுகையில், 'ஹேமாஸ் நிறுவனம் திடமான ஆண்கள் அழகை மேம்படுத்தும் தயாரிப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளதுடன், நிறுவனமானது தற்போது பாவனையாளர்களின் அதிகரிக்கும் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் அதன் உற்பத்தி வரிசைகளை விஸ்தரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது' என்றார்.

 
'PRO உடன் ஓர் மாலைநேரம்' நிகழ்வில் புகழ்பெற்ற கூந்தல் கலைஞரும், அழகை மெருகேற்றும் நிபுணருமான திலக் டி சில்வாவுடன் இணைந்து ஹேமாஸ் நிறுவனத்தின் இளம் நிபுணத்துவ விற்பனை படையைச் சேர்ந்த 20 அங்கத்தவர்களுடன் நடைபெற்ற ஹெயார் art, பேஷன் மற்றும் புதிய பாணியில் அமைந்த PRO அணிவகுப்பானது நவநாகரீக நிகழ்வாக அமைந்திருந்தது. 
 
இந் நிகழ்வில் அனைத்து புதிய வகைகளையும் காட்சிப்படுத்திய PRO இன் வர்த்தகநாம முகாமையாளர் நாலக பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'உள்நாட்டு சந்தையில் நுழைந்த ஆண்கள் அழகை மேம்படுத்தும் வர்த்தகநாமங்கள் ஹேமாஸ் நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டதாகும். அத்தோடு ஆண்கள் அழகை மேம்படுத்தும் பிரிவில் 20 வருட தலைமைத்துவத்தைக் கொண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. பரந்த வகைகளை கொண்ட PRO மூலம் தற்போது ஆண்கள் அழகை மேம்படுத்தும் சந்தையின் பலவித நடைமுறைகள் மற்றும் கூந்தல் சுகாதார துறைகளுக்கு சேவையாற்ற முடிந்துள்ளது' என்றார். மேலும் அவர், 'ஹேமாஸ் நிறுவனமானது PRO வர்த்தகநாமத்தின் கீழ் உள்ள தயாரிப்புகள் அனைத்தும் தனித்துவமான அம்சங்களுடனும், அனுகூலங்களுடனும் அமைக்க தீர்மானித்துள்ளது' என்றார். 
 
இந் நிகழ்வில் PRO குழுவினர் மூலம் இலங்கையின் வர்த்தகநாமங்கள் வரலாற்றில் முதல்முறையாக பரபரப்பான நாளுக்கு பயன்படுத்தும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட 'ச்சில் ஃபெக்டர்' (Chill Factor) மற்றும் ஒரு ஆடவரின் இரவு நேர பொழுதுபோக்கு அம்சங்களில் உட்கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் 'ஹீட் சீக்கர்' (Heat Seeker) தயாரிப்பு, EDTs (Eau de Toilettes) போன்ற 2 வாசணைதிரவியங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை விசேட அம்சமாக அமைந்திருந்தது.
 
மேலும் இந் நிகழ்வில் பார்வையாளர்களின் முன்னிலையில் மீள் வடிவமைக்கப்பட்ட PRO ஹெயார் ஜெல் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டமையானது மற்றுமொரு விசேட அம்சமாக அமைந்தது. இப் புதிய ஹெயார் ஜெல் வகைகள் அனைத்தும் PRO குழுவினர் மூலம் முன்னெடுக்கப்பட்ட விரிவான ஆராய்ச்சிகளுக்கு பின்னரே அபிவிருத்தி செய்யப்பட்டது. இதில் UV பாதுகாப்பு, மென்தோல் மற்றும் கோதுமை புரதம் ஆகியன அடங்கியுள்ளன. கூந்தல் அலங்காரங்களை இலகுவில் செய்து கொள்ளும் வகையில் இப்புதிய ஜெல் வகைகள் 'Advanced Polymers' மூலம் செறிவூட்டப்பட்டுள்ளது.
 
ஜெல் வரிசையில் காணப்படும் “Wet Shine”, “Firm Hold” மற்றும் 'Extreme Firm Hold' போன்ற தயாரிப்புகளானது கூந்தல் மற்றும் வேர்ப்பகுதியை நேரடியாக பாதிக்கும் இலங்கையின் காலநிலை, கூந்தல் மீதான UV கதிர்தாக்கம், இன்றைய வாழ்க்கைமுறை பழக்கங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூந்தல் உதிர்தல் மற்றும் தலைப்பகுதி அசௌகரியங்களை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந் நிகழ்வில் PRO முதல் முறையாக, ச்சில் ஃபெக்டர், ஹீட் சீக்கர, Fresh current போன்ற புதிய டியோ பொடி ஸ்பிறே தயாரிப்புகளை அறிமுகம் செய்திருந்தது. ஆண்களின் பேஷன் சந்தையில் பொடி ஸ்பிறே வகைகள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. இதன் காரணமாக, அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் PRO ஆனது அதன் வாசணைத்திரவிய உற்பத்தி வரிசையை விஸ்தரிக்க தீர்மானித்திருந்தது.
 
இக் கண்கவர் நிகழ்ச்சியில் பேஷன் பிரிவுகளுக்கு இடையிடையே tron நடனக்கலைஞர்கள், Beat Boxers மற்றும் Hip Hop நடனக்கலைஞர்கள் ஆகியோர் பார்வையாளர்களை களிப்பூட்டும் வகையிலான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கினர். இந் நிகழ்வில் கூந்தல் கலைஞர்கள், பிரபல நடிகர்கள் ஆகியோர் விசேட விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வினை வர்ணமயமாக்கியிருந்தனர். நிபுணத்துவ தோற்றம் மற்றும் உண்மையான அழகு ஆகியன நிச்சயமாக வருகை தந்திருந்த விசேட விருந்தினர்களின் மனதை விட்டு நீங்காத நினைவாக இருக்கும் என்பது திண்ணம்!
 
இலங்கையின் முன்னணி பெருநிறுவனமாக திகழும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹேமாஸ் மனுஃபக்டரிங்(பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் மூலம் FMCG, சுகாதாரப்பராமரிப்பு, போக்குவரத்து, பொழுதுபோக்கு மற்றும் மின் உற்பத்தி போன்ற 5 துறைகளில் தமது சேவையை வழங்கி வருகிறது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X