டிரையம்ப் லங்கா நிறுவனமானது (Triumph), அண்மையில் இடம்பெறவுள்ள சுRunway Super Model 2014இன் பிரதானமான சிறிய அலங்கார அணிவகுப்பு... "> Tamilmirror Online || Runway Super model 2014
Runway Super model 2014

டிரையம்ப் லங்கா நிறுவனமானது (Triumph), அண்மையில் இடம்பெறவுள்ள சுRunway Super Model 2014இன் பிரதானமான சிறிய அலங்கார அணிவகுப்பு ஒன்றிற்கு அனுசரணை வழங்கியிருந்தது. இந்த அணிவகுப்பு கொழும்பு Court Yardஇல் இடம்பெற்றது.
 
Miss Body Beautiful அணிவகுப்பில் நவீன டிரையம்ப் உள்ளாடைத் தெரிவுகளை காட்சிப்படுத்திய போட்டியாளர்கள் மூலம் பெண்கள் உடலமைப்பின் உண்மையான அழகு வெளிக்கொணரப்பட்டிருந்தது. இப்போட்டியில் பிரதானமாக சிறப்பான உள்ளாடைகளுடன் போட்டியாளர்களின் உண்மையான அழகு பாராட்டப்பட்டதுடன், பெண்கள் உடலின் சரியான சமநிலை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தன.
 
Runway Super Model 2014 என்பது இலங்கையில் வளர்ந்து வரும் பெண் மொடல்களுக்கு தங்களது உண்மையான திறனை சர்வதேச மேடையில் பரீட்சித்து பார்ப்பதற்கான சிறந்த களமாகும். உள்நாட்டு அணிவகுப்பின் இரண்டு இறுதி போட்டியாளர்களுக்கு சீனாவில் இடம்பெறவுள்ள 9ஆவது Asian Super Model போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. போட்டிமிக்க சர்வதேச அணிவகுப்பில் இலங்கை சார்பாக பங்கேற்கும் இந்த அழகிய பெண்களுக்கு தீவிரமான பயிற்சிகள், சுய அலங்காரம் மற்றும் உடற்தகுதி பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கி தொழில் நிபுணத்துவம் மிக்க மொடல்களாக தங்களை மாற்றியமைப்பதற்கான வாய்ப்பு இந்த போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
 
டிரையம்ப் இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் செயற்பாட்டு தலைவர் அமல் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், 'Miss Body Beautiful அணிவகுப்பு என்பது உண்மையிலேயே எமது பெண் மொடல்களின் உள்ளக அழகினை அங்கீகரிக்கும் சிறந்த நிகழ்ச்சியாகும். இதுவே Runway Super Model 2014 போட்டியில் பெண்களுக்கான உள்ளாடை வடிவமைப்பாளர் எனும் ரீதியில் டிரையம்ப் கைகோர்த்ததன் காரணமாகும். மேலும் அவர்களது அழகிய உடலினை பாராட்ட ஊக்குவித்தல் மற்றும் இலங்கைக்கு சர்வதேச புகழை தேடித்தரச் செய்வதே எமது எண்ணமாகும். எமது பெண்களுக்கான உள்ளாடைகள் இலங்கையின் உடற்தோற்றத்திற்கு பொருந்தும் வகையில் விசேடமாக தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த பெண் மொடல்கள் இலங்கையின் அனைத்து பெண்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்' என்றார்.
 
இலங்கை பெண்களின் உள்ளக அழகினை மேம்படுத்துவதில் டிரையம்ப் தம்மை அர்ப்பணித்துள்ளதுடன், இதன் காரணமாகவே Miss Body Beautiful அணிவகுப்புடன் கைகோர்த்தோம். போட்டியாளர்கள் மூலம் டிரையம்ப்பின் நவீன உள்ளாடைத் தெரிவுகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், உள்நாட்டு அழகிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன. டிரையம்ப் ஸ்ரீலங்கா நிறுவனமானது இலங்கை பெண்களுக்கு சௌகரியமானதும், கனகச்சிதமானதுமான உள்ளாடைகள் உருவாக்குவதற்கு தம்மை அர்ப்பணித்துள்ளது.
Runway Super model 2014

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.