2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பூமியை போன்ற கிரகம் கண்டுபிடிப்பு

Editorial   / 2018 நவம்பர் 19 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரியனுக்கு அருகே பூமியை போன்ற புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க கலிபோனியா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆராய்ச்சி நிலையமும், ஸ்பெயின் விண்வெளி அறிவியல் மையமும் இணைந்து ‘பர்னாட்ஸ்’ என்ற நட்சத்திரம் குறித்து ஆய்வை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அந்த நட்சத்திரத்துக்கு அருகே பூமியை போன்ற கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகம் பூமியை விட 3.2 மடங்கு பெரியது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

160 பாகை செல்ஷியஸ் வெப்ப நிலை நிலவுவதனால், அங்கு கடுமையான குளிர் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர திரவ நிலையில் நீர் இல்லாதமை காரணமாக மனிதரோ அல்லது எந்த வகையான உயிரினங்களோ அங்கு வாழ முடியாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .