2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வைரமாக மாறிய எரிநட்சத்திரம்

Editorial   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார், 10 வருடங்களுக்கு முன், பூமியில் விழுந்த எரிநட்சத்திரம் ஒன்றில், முழுக்க முழுக்க வைரம் இருந்துள்ளதை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

சூடானில் இருக்கும் ‘கார்ட்டோம்’ பல்கலைக்கழக மாணவர்கள், அந்த எரி நட்சத்திர துகள்களில் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில், இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

சூடானில் இருக்கும் நுபியன் பாலைவனத்தில்தான், இந்த நட்சத்திரம் விழுந்துள்ளது. இந்த நட்சத்திரத்தை ஆராய்ச்சி செய்ததில் இருந்து, பல முக்கியமான தகவல்கள் வெளியே வந்துள்ளன. மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்பது கூட இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று, அவர்கள் கூறியுள்ளனர். இந்த நட்சத்திரத்திற்கு ‘ஆல்மஹாட்டா சிட்டா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளியில், நாசா அமைத்துக் கொண்டிருந்த ஆராய்ச்சி மையம், பூமியை நோக்கி எரிநட்சத்திரம் ஒன்று வந்ததை கண்டுபிடித்தது. ஆனால், அந்த எரிநட்சத்திரம், பூமியை நெருங்குவதற்கு முன்பு, சில கி.மீ தூரத்தில் வெடித்து சிதறிய போதிலும், பூமிக்குள் நுழைந்தது. சூடானின் நுபியன் பாலைவனத்தில்தான் பாதி எரிந்த நிலையில், இவ் எரிநட்சத்திரம் விழுந்தது.

இதை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சூடானில் இருக்கும் ''கார்ட்டோம்'' பல்கலைக்கழக மாணவர்கள், அரசிடம் இருந்து வாங்கி ஆராய்ச்சி செய்தார்கள். அந்த ஆராய்ச்சியின் படி, இதில் முழுக்க முழுக்க வைரம் நிரம்பி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நட்சத்திரத்தின் உடற்பகுதி முழுவதும், சிறுசிறு வைர கற்கள் இருந்துள்ளன.

அதேவேளை, இந்த எரிநட்சத்திரம் வெடித்த போது, வைரம் உருவாகி இருக்க வாய்ப்பு இல்லை என்றும், அதற்கு முன்பே, குறித்த நட்சத்திரத்தில், வைரம் இருந்திருக்கலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரத்தை போல, மிகவும் தூய்மையான வைரத்தை, இதுவரை பார்த்தது இல்லை என்றும், இதில் எந்தவிதமான அசுத்தமும் கலக்கவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதில் மிகவும் சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால், இந்த வைரம், பூமி தோன்றும் முன்பே, உருவாகி இருக்கலாம் என்றும், அதன்படி நட்சத்திரங்கள் மோதி, எப்படி சூரிய குடும்பம் உருவானதோ, அப்போது தான் இந்த எரிநட்சத்திரம் உருவாகி இருக்கக் கூடும் என்றும், மேற்படி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X