கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க

வரலாற்று ரீதியாக நாம் காணும் புகைப்படங்களில் பெரும்பாலானவை, உலகை புரட்டிப்போட்ட பெரும் நிகழ்வுகள், பெரும் தலைவர்கள், உலக போர்கள், அசம்பாவிதங்கள் போன்றவையாகத் தான் இருக்கும். ஆனால், நாம் கண்டு ரசித்த, பெரிதும் படித்து அறிந்த வரலாற்று பக்கங்களின் பின்புறத்தில் நடந்த சிறிய சிறிய விடயங்கள், சிறிய சிறிய மகிழ்ச்சிகள், இழப்புகள் போன்றவையும் புகைப்படங்களில் பதிவாகியுள்ளன.

ஆனால், அதைக் காணத்தான் யாருக்கும் நேரமுமில்லை. அதைக் காட்டவும் தற்போது யாருமில்லை. இரண்டாம் உலகப்போர் நடந்துக் கொண்டிருந்த போது,  மக்கள் வசிக்கும் நகர் பகுதிகளில் நடந்த பல குண்டுவெடிப்புச் சம்பவங்களின் காரணத்தால், பெரும் விஷத்தன்மை, காற்றில் கலந்ததால், பிரிட்டன் மக்கள் நாள் முழுக்க மாஸ்க் அணிந்து வாழ்ந்த நாட்களை நாம் அறிவோம். ஆனால், அதே இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு, மக்கள் அதை எப்படி கொண்டாடினார்கள் என்பதை நாம் யாரும் கண்டிருக்க மாட்டோம்.

இரண்டாம் உலகப்போரை, ஒருசில நாடுகளின் தலைவர்கள் மட்டும் தான் விரும்பினார்களே தவிர, உலக மக்கள் அல்ல. இந்தப் போரின் காரணத்தால், எந்தப் பாவமும் அறியாத பலர், தங்கள் உயிரை, குடும்பங்களை பரிதாபமாக இழந்தனர்.

இதோ! 1945இல், இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததை, அமெரிக்காவின் நியூயார்க் மக்கள், கிழிந்த காகித துண்டுகளின் குவியலின் இடையே அமர்ந்து, கொண்டாடிக் கொண்டிருந்த போது எடுத்த படம் இது.

கருளா கட்டையை கையில் எடுத்து சுத்திதான் சாகசம் செய்ய வேண்டும் என்றில்லை. அதன் மேல் ஏறி நின்றும் சாகசம் செய்யலாம் என, அந்தக் காலத்து ஆணழகர்கள் பயன்படுத்திய கருளா கட்டையின் மீது ஏறி நின்று சாகசம் செய்யும் சர்கஸ் யானை.

Pinocchio எனும் கார்டூன் நாடகத்துக்காக டிஸ்னியில் பணிபுரிந்து வந்த அணிமேட்டர்கள், நீர் பபிள்ஸ்களை எப்படி அனிமேட் செய்யலாம் என,  ஆலோசித்து வந்த போது எடுக்கப்பட்ட படம்.

பில் பாக்ஸ்டன் (Bill Paxton) எனும் அமெரிக்க நடிகரின் புகைப்படம். இது 1963இல் ஜே.எப். கென்னடி பேசிக் கொண்டிருந்த போது எடுத்தப்படும். இந்தப் படத்தின் சிறப்பு இதுவல்ல. இந்த நாளில் தான், கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.

1994இல், நெல்சன் மண்டேலாவின் வருகையையொட்டி, அவருக்காக வைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரசாரப் பதாகையின் கம்பம் மீது ஏறி, அவருக்கு தங்களது ஆதரவை அளிக்க மக்கள் கூடிய போது எடுக்கப்பட்ட படம்.

1903இல், இமாலய ஆற்றை கடந்து செல்ல, மாட்டின் தோலைக் கொண்டு செயப்பட்ட படகில் பயணிக்க தயாராகிக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட படம்.

அரசர் நான்காம் ஹென்றியின் தலை என நம்பப்பட்டு வரும் மண்டை ஓடு.  1930களில், அருங்காட்சியகத்தில் வைத்திருந்த போது எடுக்கப்பட்ட படம்.

ரஷ்யாவின் தீயணைப்பு படை வீரர்கள். அவரவருடைய தீயணைப்புக் கருவி மற்றும் பாதுகாப்பு உடையுடன் எடுத்துக் கொண்ட குழு புகைப்படம்.

தங்களுக்கு மதுபானம் வேண்டும் என்று கூறி, ஆண்கள் பலரும் பேரணியாக சேர்ந்து We Want Beer என, பதாகைகள் ஏந்தி 1931இல் போராட்டம் செய்த போது எடுத்தப்படம்.

ஜெர்மனியைச் சேர்ந்த ஏழடி உயருமுள்ள இராணுவ வீரருடன், பிரிட்டிஷ் இராணுவ வீரர் - 1944 எடுக்கப்பட்ட படம்.

உலகெல்லாம் தனக்கென தனி பெரும் ரசிகர் பட்டாளம் வைத்திருந்த ஹொலிவூட் நடிகை மர்லின் மன்றோ, 1944இல் கலிபோர்னியாவில் அமைந்திருந்த Van Nuys factory-இல் பணிபுரிந்து வந்த போது எடுக்கப்பட்ட படம்.

1980களில் திரைப்படங்களின் முடிவில் டைட்டில் கார்டு எப்படி உருவாக்கப்பட்டு ஓட்டப்பட்டது என்பதை காண்பிக்கும் படம்.

1967இல் சுவீடனில் வாகனம் ஓட்டுவதை இடது புறத்தில் இருந்து வலது புறமாக மாற்றிய போது, சாலையில் ஏற்பட்ட குழப்பங்களின் போது எடுக்கப்பட்ட படம். 


கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.