2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகத்தின் முடிவு காலம்!

Editorial   / 2018 மே 30 , பி.ப. 07:26 - 4     - {{hitsCtrl.values.hits}}

வரும் காலங்களில் மனித இனம் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கு 2020 இலும்இ செவ்வாய்க்கு 2025 இற்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும்.

ஏனென்றால் நாம் பூமியை விட்டு வெளியேற வேண்டிய காலம் மிக விரைவில் வரப்போகிறது என மறைந்த உலகப் புகழ்பெற்ற அறிவியலாளரும் பிரபல விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.

உலகத்தை தனது கண் அசைவினில் ஆட்டிப்படைத்த ஸ்டீபன் ஹாக்கிங்இ தான் இறப்பதற்கு முன்னைய காலப்பகுதிகளில் பல ஆய்வுகளை நடத்தி இவ்வுலகிற்கு தீர்க்கத்தரிசன கருத்துக்கள் பலவற்றை முன்வைத்துச் சென்றுள்ளார்.

எதிர்காலத்தில் மனித இனம் முற்றிலும் அழிந்து போகாமல்இ தொடர்ந்து வாழ வேண்டுமானால்இ பூமியை கைவிட்டு வேறு கிரகங்களில் மனிதன் வாழ வேண்டும் என்று அவர் வலியுறுத்திச் சென்றுள்ளார்.

பூமியைவிட்டு மனிதன் வேற்றுக்கிரகத்திற்கு செல்ல வேண்டியதன் அவசியத்தையும் மனித இனத்தின் எதிர்காலம் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ள தீர்க்கத்தரிசனங்கள் என நோக்கும்போதுஇ

இந்த விவகாரம் எதிரெதிர் நாடுகளை ஒன்றிணைத்துஇ எதிர்வரும் பெரும் பிரச்சனையை ஒன்றிணைந்து கையாள வழிவகை செய்யும் என்று நம்புவதாகக் கூறினார்.

மனித இனம் பூமியில் அதிக காலம் வாழ முடியாது. ஏனென்றால் பூமி, ஆஸ்ட்ராய்டு என்று அழைக்கப்படும் பெரிய விண் பாறைகளால் மோதப்படவும், நம் சூரியனாலேயே விழுங்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார்.

அவ்வாறு நடக்கும் பட்சத்தில் பூமி முழுவதும் அழிந்துவிடும். எனவே தொலைதூர கிரகங்களுக்கு செல்வதே மனித இனத்தின் அழிவைத் தடுக்க ஒரே வழி என்று வலியுறுத்தியுள்ளார்.

விண்வெளி சம்பந்தப்பட்ட படிப்புகளான ஆஸ்ட்ரோபிசிக்ஸ் மற்றும் காஸ்மோலஜி உள்ளிட்ட படிப்புகளை இளம்தலைமுறையினர் ஆர்வமுடன் கற்க வேண்டும்.

மனித இனத்தின் இந்த தொலைதூரப் பயணமானது தவிர்க்க முடியாதது. ஏனெனில் பூமியில் பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை வளங்கள் குறைந்து வருவது பூமியை அச்சுறுத்துவதாக உள்ளது.

நாம் பூமியை விட்டு கட்டாயம் செல்லவேண்டும். வேறொரு சூரியனைக் கொண்ட கிரகத்தைக் கண்டறிந்துஇ அங்கு சென்று வாழவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். மனித இனம் தொடர்ந்து வாழ வேண்டுமானால்இ யாருமே போகாத கிரகத்தில் நாம் சென்று வாழ வேண்டும்.

அதற்கான ஆயத்தப் பணிகளை தற்போதே தொடங்க வேண்டும். இன்னும் 30 வருடங்களில் பூமியிலிருந்து வெளியேற ஏதுவாகஇ லூனார் பேஸ் என்று கூறப்படும் விண்வெளி காலனிகளை விஞ்ஞானிகள் அமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டிச் சென்றுள்ளார்.


You May Also Like

  Comments - 4

  • Pari Thursday, 31 May 2018 07:56 AM

    ஸ்டீபன் சொல்லுவது உன்மையாக இருக்கலாம் ஆனால் இப்போது இருக்கும் நமது பூமியில் எல்லா வளங்களும் உள்ளன இதுவரை நாம் தொலைநோக்கியால் எந்த கிரகமும் பூமிபோல் அமையவில்லை, நம் பூமியே இயற்கை முறையில் பாதுகாக்க வேண்டும்

    Reply : 22       20

    Irshad Thursday, 31 May 2018 07:59 AM

    Read and see QUran sura zilzaalaha with English translation , we can't escape anywhere ,the world and milky way everything will be destroy and that day call quiyama (that mean end of world) . Then start day of judgment .

    Reply : 11       39

    சிவசுப்பரமணியம் Thursday, 31 May 2018 03:00 PM

    sorry he is wrong! for example the earth is growing and daily there are lot more than 48000tons of foreign particles absorbed by earth añd as per his tthinking

    Reply : 0       0

    ஃபாருக் Friday, 01 June 2018 03:08 AM

    இந்த பூமி ஒரு நாள் அழிந்து விடும் என இந்த விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் முன்பே 1450 ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியை படைத்த இறைவன் கூறிவிட்டான் அதேபோன்று மறுமை என்ற ஒரு வாழ்க்கை இருக்கிறது அங்கு இந்த பூமியில் வாழ்ந்த அனைவரும் வாழ்வோம் என்றும் யார் யார் எப்படி பட்ட வாழ்க்கையில் வாழ்வோம் என்றும் கூறிவிட்டான் நீங்கள் அதை அறிந்து கொள்ள வேண்டுமானால் படியுங்கள் திரு குர்ஆன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .