2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கைதி மீது வந்த காதல்- திருமணத்தில் நிறைவு

Editorial   / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 05:53 - 1     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலை வரலாற்றிலே விசித்திரமான திருமணம் ஒன்று இன்று(7) மெகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.

30 வருடம் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள  39 வயதான கைதி ஒருவரை கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் பெண் உறுப்பினர் ஒருவர் இன்று சிறைச்சாலைக்குள் திருமணம் செய்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான சமீலா என்ற குறித்த பெண் உறுப்பினர் 3 வருட போ​ராட்டத்துக்குப் பின்னர் கைதி​யான தனது காதலனை இன்று கரம் பிடித்துள்ளார்.

தனது காதலனின் விடுதலைக்காக தான் போராட வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,சிறைச்சாலை அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்துவதாகவும், அவரது விடுதலை தொடர்பில் போராட தனக்கு எவ்வித உரிமையும் இல்லை என்றும்,முடிந்தால் திருமண சான்றிதழைக் காட்டுமாறும் அதிகாரிகள் தனக்கு கூறியதாகவும் சமீலா தெரிவித்துள்ளார்.

இதனை சவாலாக ஏற்றுக்கொண்டு குறித்த பந்துல என்ற கைதியை திருமணம் முடிக்க சிறைச்சாலையின் உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரிய போதும் தமது திருமணத்திற்காக கடந்த 3 வருடங்கள் போராடி இறுதியில் சிறைச்சாலைகள் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனை சந்தித்துள்ளார்.

இறுதியில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தமது திருமணத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துக்​கொடுக்குமாறு அமைச்சர் கடிதம் மூலம் உத்தரவிட்டதையடுத்து இன்று தமது திருமணம் நடைபெற்றதாக சமீலா தெரிவித்துள்ளார்.

எனினும் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது தனது உறவினர்களுக்கோ,தன்னை அலங்கரிக்க வந்த பெண்ணிற்கோ ஊடகவியலாளர்களுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை. என்றும் தனது திருமணத்தை புகைப்படமெடுத்த திருமண பதிவாளரை குறித்த புகைப்படத்தை அழிக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டதாகவும் சமீலா தெரிவித்துள்ளார்.

திருமணத்தின் போதும் தனது கணவருக்கு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது அணிவிக்கப்படும் ஆடை​யையே அணிய அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சிறையில் உள்ளவர்களும் மனிதர்களே என வாசகம் சிறைச்சாலை சுவர்களில் எழுதப்பட்டுள்ள நிலையில் அதற்கு கீழே சிறையில் உள்ள அதிகாரிகள் மனிதர்களல்ல என எழுத வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தன்னுடைய கணவன் வெளிக்கடையில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றை நேரில் கண்ட சாட்சி என்றும்,இதன் காரணமாகவே அவர் சிறைச்சாலையில் அதிகம் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும்,அடிக்கடி அநுராதபுரம்,குருவிட்ட சிறைகளுக்கு மாற்றப்படுவதாகவும்,அநுராதபுரத்திலிருந்து மெகசீன் சிறைக்கு தனது கணவர் பஸ்ஸில் அழைத்துவரப்படும் போது பஸ்ஸில் அவருக்கு இருப்பதற்கு ஆசனம் கூட வழங்கப்படுவதில்லை என்றும் சமீலா தனது உள்ளக்குமுறல்களை கொட்டியுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 1

  • இ.சோதிவேல் Friday, 08 December 2017 04:55 AM

    இவருக்கு ஏற்பட்ட நிலை எமது நாடு மனிதாபிமானத்தில் இன்னும் முன்னேறவில்லை என்பதை காட்டுகின்றது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .