2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மர்மத் தீவில் திடீரெனத் தோன்றிய புதியத் தீவு

Editorial   / 2018 மார்ச் 01 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட அத்திலான்டிக் சமுத்திரத்தில் அமையப் பெற்றுள்ள முக்கோணத் தீவே 'பெரமுடா தீவு' ஆகும். இந்த தீவை பற்றி கேள்வியுறாத நபர்கள் யாரும் இருக்கவே முடியாது. அத்தகைய மர்மங்கள் நிறைந்த ஒரு  பகுதியாக இது விளங்குகின்றது.

குறிப்பாக இத்தீவின் மேலாக செல்லும் விமானங்கள் மற்றும் இதன் கடல் மார்க்கத்தில் பயணிக்கும் கப்பல்கள் உட்பட அனைத்தும் மாயமாகப் போய்விடும் சம்பவம் வியப்பின் உச்சக்கட்டமாகும். அதிலும் அவற்றின் பாகங்களைக் கூட கண்டுப்பிடிக்க முடியாமல் போகும் நிலையானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்ற ஒரு விடமாகும். இதன் காரணமாக தான் இத்தீவினை, 'சாத்தானின் முக்கோணம்' என்று அழைக்கும் வழக்கம் மக்களிடையே உருவானது.

இத்தகைய மர்மங்கள் நிறைந்த பெரமுடா தீவிலே, சமீபத்தில் புதிய தீவொன்று தோன்றி அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில்  சிறிய மணல் திட்டாக தோன்றி கொஞ்ச நாட்கள் செல்கையில், பிறை வடிவில் பெரிய தீவொன்றாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த தீவிற்கு 'ஷெல்லி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இந்த ஷெல்லி தீவு ஒரு மைல் நீளமும் 400 அடி அகலமும் கொண்டதாக காணப்படுகிறது. இப்புதிதாகத் தோன்றிய தீவுக்கு செல்ல நினைக்கும் புகைப்படக்காரர்கள் மற்றும் சங்கு சேகரிப்பாளர்களை மிகவும் கவனத்துடன் செயல்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .