2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மறுபிறவியெடுத்த பென்னி

Kogilavani   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பென்னி என்ற நாய்க்குட்டி தன் வாழ்நாளின் பாதியை, பாதாள உலகத்திலேயே கழித்துள்ளது. வாரத்துக்கு மூன்று முறை மட்டுமே உணவு என வெளியுலகமே பார்க்காமல் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

தினமும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல்வேறு சித்திரவதைகளை சந்தித்திருக்கிறது பென்னி. கடந்த வருடம் சில தன்னார்வலர்கள் பென்னியை, பாதாள உலகிலிருந்து மீட்டுள்ளனர்.

இந்நிலையில், பல வருடங்கள் ஒரேயிடத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்ததால் பென்னிக்கு வெளியுலக தொடர்பு தெரியவில்லை.

இதனால் பென்னியை வாங்க ஒருவரும் முன்வரவில்லை.  ஆனால், டெலுகா என்பவருக்கு பென்னி மீது தனிப்பிரியம் வந்துவிட்டது. அவர் அந்த நாயை அழைத்துச் செல்ல விருப்பம் தெரிவிக்க, நாயை மீட்டவர்களோ இந்த நாயைப் பற்றி விவரித்திருக்கிறார்கள்.  பென்னி மனதளவில் சரியில்லாமல் இருப்பதால், கொடுக்க முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

கிடைக்காது என்ற எண்ணத்தில் பென்னி அருகில் சென்று தடவிக்கொடுக்க, பென்னி டெலுகாவை நோக்கி வந்து வாலாட்டியிருக்கிறது. அப்போதே இந்த நாய் தனக்கு வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிவிட்டார் டெலுகா.

பென்னியை வீட்டுக்கு அழைத்து சென்ற பின்னர்தான் டெலுகா சில பிரச்சினைகளை சந்தித்திருக்கிறார். வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்ததால்,  எதைப்பார்த்தாலும் பயந்து கொண்டேயிருந்திருக்கிறது பென்னி.

மனிதர்கள், தொலைக்காட்சி, நாற்காலி, மேசை என அனைத்துக்குமு பயந்திருக்கிறது பென்னி.

கண்களால் வெளியுலகை பார்க்கக் கூட முடியாதளவுக்கு பென்னி பாதிக்கப்பட்டிருந்தது.

ஆனால், டெலுகா  பென்னியை தனது  குழந்தையை போன்று பராமரித்துள்ளார். இந்த உலகத்தை பென்னிக்கு பழக்க வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளார்.

இவரின் நண்பர்கள் தாங்கள் வைத்திருக்கும் நாயுடன் டெலுகா வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அவற்றுடன் பழக ஆரம்பித்த பிறகு, பென்னியிடம் நல்ல மாற்றம் தெரிந்திருக்கிறது. தொடர்ந்து உலகத்தை அறிமுகப்படுத்த நினைத்த டெலுகா, பென்னியுடன் சாகச பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

பல வருடங்கள் வீட்டுக்குள்ளேய அடைத்து வைக்கப்பட்டிருந்த பென்னி வெளியுலகத்தை வெகுவாக ரசிக்க ஆரம்பித்துவிட்டது.

அதேசமயம், கையிற்றின் மூலமாக மலையேறுவது, பாறைக்கு பாறை தாவுவது என தன்னை அனைத்துக்கும் பழக்கிக்கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .