சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

சூரிய சக்தியில் இரவுநேரத்தில் பறந்த முதலாவது விமானம்

சூரிய சக்தியில் இயங்கும் பாரிய கிளைடர் விமானமொன்று முதல் தடவையாக இரவு நேரத்தில் சூரியசக்தியில் மாத்திரம் பறந்து சாதனை படைத்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் வியாழனன்று இச்சாதனைப் பறப்பு இடம்பெற்றது.  26 மணித்தியாலங்கள், 9 நிமிடங்கள் இவ்விமானம் பறந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பகலில் சேமிக்கப்பட்ட சூரிய ஒளியே இவ்விமானத்தின் இரவு நேரப் பறப்புக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விமானத்தின் அகலம்  ஏ340 எயார்பஸ் ரக விமானங்களின் அகலத்திற்குச் சமமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. விமானங்களின் வரலாற்றில் சூரியசக்தியில் பறந்த மிகப்பெரிய விமானமாகவும் இது விளங்குகின்றது.

தூய்மையான தொழில்நுட்பம் மற்றும் மீளப்பயன்படுத்தப்படக்கூடிய எரிசக்தி ஆகியவற்றுக்கான சாத்தியத்தை இவ்விமானத்தின் வெற்றிகரமான பறப்பு விளக்குகிறது என இத்திட்டத்தின் தலைவரான பேர்ட்ரான்ட் பிக்கார்ட் தெரிவித்துள்ளார்.  இவர் 1999 ஆம் ஆண்டு வாயுபலூன் மூலம் முதல் தடவையாக உலகத்தைச் சுற்றி வந்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விமானப் பயணத்தின் போது இணை விமானியாக செயற்பட்ட அந்ரே போர்ஸ்ச்பேர்க் கருத்துத் தெரிவிக்கையில் "இச்சாதனையை இன்னும் நம்பமுடியாதுள்ளது. நாம் எதிர்பார்த்ததைவிட இப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது. நாம் இன்னும் நீண்டதூரம் பயணம் செய்யவிருந்தோம். ஆனால் நாம் செய்ய நினைத்ததை சாதித்துவிட்டதால் திரும்பிவந்துவிட்டோம்" எனக் கூறினார். 

Comments (3)கருத்து
...
written by xlntgson, August 10, 2010
சூரிய சக்தி பிரச்சினைகளற்றது பக்கவிளைவுகளற்றது, என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால் இப்போது சூரியப்புயல் பற்றி பேசப்படுகிறது. சூரியனில் ஓரிடத்தில் அதிகமான வெப்ப கதிர்கள் பூமியை நோக்கி பாய்கின்றனவாம், உலகில் அதிக உஷ்ணத்துக்கு இது காரணமாம். சூரிய சக்திக்கும் தொப்பிதான்! சில காலம் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பர், ஆனால் இந்த மாதிரி உஷ்ணம் கூடிக்கொண்டே போனால் என்ன செய்ய? பனிமலை உருகி தீவுகள் கடலில் மறைந்து கடைசியில், இது தான் என்று அதுவும் கொஞ்சம் சந்தேகத்தோடு ஒத்துக்கொள்வார்கள்!
...
written by mohamed sulfikkar, September 19, 2010
its very good for all tamil peopeles.
...
written by Muneer, April 27, 2011
நல்ல சாதனை படைத்துள்ளார். சூரிய சக்தியை கொண்டு இவ்வளவு பிரமாண்டமான விமானம் பறக்கிறது எண்டு நினைக்க மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் சூரிய சக்தியின் ஆற்றலைகொண்டு புதிய சாதனைகளை படைக்க இத்திட்டத்தின் தலைவருக்கு எனது வாழ்த்துக்கள்.

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy


 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: