ஜீவாவின் வந்தான் வென்றான்
சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010 18:46
.jpg)
சிறிய இடைவெளிக்குப் பின்னர் ஜீவாவின் படத்திற்கு இன்று சனிக்கிழமை பூஜை போடப்பட்டிருக்கிறது. ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற இரண்டு வெற்றிப்படங்களை தந்த ஆர்.கண்ணனின் மூன்றாவது படமாக உருவாகிறது வந்தான் வென்றான்.
கண்ணனின் குருவாகிய இயக்குநர் மணிரத்தினம் தானாவே நேரில் வந்து இப்படத்தின் தொடக்க விழாவினை சிறப்பித்திருக்கிறார். ''என்னுடைய நண்பரும் உதவி இயக்குநராக இருந்தவருமான கண்ணன், தொடர்ச்சியாக இரண்டு வெற்றிப்படங்களை தந்திருக்கிறார். நிச்சயமாக வந்தான் வென்றான் படமும் வெற்றிபெறும். இவரது வளர்ச்சியைப் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது'' என உளமார வாழ்த்தியிருக்கிறார் இயக்குநர் மணிரத்தினம்.
வாசன் விஸூவல்ஸ் வென்ஸர்ஸின் தயாரிப்பில் உருவாகும் 'வந்தான் வென்றான்' திரைப்படத்தின் கதாநாயகனான ஜீவா, கால்பந்தாட்ட வீரராகவும் மென்பொருள் பொறியியலாளராகவும் நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்கும் தபஸி, பொறியியலாளராக நடிக்கிறார். எஸ்.தமான் இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
மும்பாயினையும் சென்னையினையும் தளமாகக் கொண்டு உருவாகும் 'வந்தான் வென்றான்' படத்திற்கு வசனம் எழுதுகின்றார் பட்டுக்கோட்டை பிரபாகர். ''வித்தியாசமான போராட்டத்தின் மத்தியில் உருவாகும் காதல்கதை வந்தான் வென்றான்'' என்கிறார் இயக்குநர் கண்ணன்.
இப்படம் ஜீவாவுக்கும் கண்ணனுக்கும் பெரு வெற்றிப்படமாக அமையுமென அனைவரும் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இயக்குநர் கண்ணனுக்கு இப்படம் 'ஹெட்றிக்' வெற்றியைக் கொடுக்கும் என எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வாழ்த்துக் கூறியிருக்கிறார்.
.jpg)


யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1123
|
05-02-2012 08:00 PM Hits:680
|
.gif)
.jpg)
