கொழும்பில் ரமழான் மற்றும் ஈத் பஸார்
வெள்ளிக்கிழமை, 20 ஓகஸ்ட் 2010 18:18

எதிர்வரும் ரமழான் பண்டிகையை சிறப்பிக்கும் பொருட்டு, இலங்கை -பாகிஸ்தான் நட்புறவு சம்மேளனத்தால், 'ரமழான் மற்றும் ஈத் பஸார்' விற்பனை கண்காட்சி நிகழ்வு கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள DBU ஹோல் மற்றும் கார்டினில் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த விற்பனை கண்காட்சி நிகழ்வில் 80 இற்கும் அதிகமான காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.
இங்கு ரமழான் பண்டிகையை கொண்டாட அவசியமான அனைத்துவிதமான ஆடை அலங்கார பொருட்களும், உணவு பொருட்களும் மிகவும் மலிவான விலையில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இந்நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியில் ஒருபகுதி, பாகிஸ்தானில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த மக்களுக்காக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1123
|
05-02-2012 08:00 PM Hits:680
|
.gif)
.jpg)
