செல்லிட தொலைபேசியை பயன்படுத்த முடியாத சுமோ வீரர்கள்
புதன்கிழமை, 01 செப்டம்பர் 2010 15:09
ஜப்பானிய சுமோ மல்யுத்த வீரர்கள் சங்கம் அவ்வீரர்களுக்கு ஐபாட்களை (iPads) விநியோகித்து வருகிறது.
அவ்வீரர்களின் தடித்த விரல்களால் சாதாரண செல்லிடத் தொலைப்பேசியை பாவிக்க முடியாமல் போயுள்ளதாம். இதனால் அவர்களுக்கு iPads களை வழங்க, 'சுமோ வீரர்கள் சங்கம்' தீர்மானித்தது. இதுவரை அச்சங்கம் 60 iPadகளை விநியோகித்துள்ளது.
'இதை இலகுவாக பயன்படுத்தலாம். அத்துடன் மின்னஞ்சலையும் இலகுவாக அனுப்பலாம்' என்று அந்த சங்கத்தின் தலைவர் ஹனாரேகொமா தெரிவித்துள்ளார்.
62 வயதான முன்னாள் சுமோ மல்யுத்த வீரரான அவர், தனது செல்லிடத் தொலைப்பேசிக்கு வரும் குறுந்தகவல்களை வாசிப்பதற்கு இயன்ற போதிலும் அந்த குறுந்தகவல்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்ற முறையும் கணினியை பயன்படுத்தும் முறையும் தெரியாது என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
சுமோ மல்யுத்த வீரர்களின் தடித்த விரல்களுக்கு இதனுடைய iPad களின் இடைவெளிகள் போதுமானதாக இருக்கும் எனக் கருதப்படுவதால் அவற்றை தெரிவுசெய்ததாக மேற்படி சங்கம் கூறியுள்ளது.


யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
06-02-2012 04:23 PM Hits:583
|
06-02-2012 01:31 PM Hits:504
|
06-02-2012 02:05 PM Hits:331
|
.gif)
.jpg)
