சிறையில் பெண் கைதிகளின் பெஷன் ஷோ
வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 17:25
சீனாவிலுள்ள சிறைச்சாலையொன்றில் உள்ள பெண் கைதிகள் இணைந்து பெஷன் ஷோவொன்றை நடத்தியுள்ளனர். இவர்கள் கழிவுப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து இந்த பெஷன்சோவில் பங்குப்பற்றியுள்ளனர்.
சிறைச்சாலையில் உள்ள 120 பெண் கைதிகள் இந்த பெஷன் சோவில் பங்குப்பற்றியதாகவும் இவர்கள் பிளாஸ்டிக் பைகள், தும்பினாலான பைகளின் கைப்பிடிகள், உடைந்த பொருட்கள் போன்றவற்றினால் தயாரிக்கப்பட்ட பொருட்களாலான ஆடைகளை அணிந்த வண்ணம் மேடையில் ஒய்யாரநடை நடந்து பார்வையாளர்களை அசத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வு ஹெனான் மாகாணத்திலுள்ள ஷெங்ஸோ பெண்கள் சிறைச்சாலையில் நடைப்பெற்றது. மீள்சுத்திகரிப்பையும் காபனீரொட்சைட் வெளியேற்றத்தை குறைக்கும் வகையிலான வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்கும் பொருட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 8 மாலை நேர ஆடைகள், குப்பைகள் சேகரிக்கப்படும் கருப்பு நிற பைகளில் உருவாக்கப்பட்டிருந்தன.
2 திருமண வைபவத்திற்கு அணியும் சட்டைகள், கழிவறைக் கடதாசியினால் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆடைகள் பலரது கண்களை ஈர்த்தன.
சிறைக்கைதிகளால் இனியும்கூட சாதித்துக்காட்ட முடியும் என்பதை காட்டுவதற்காக இந் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரி கு சிகிங் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
06-02-2012 04:23 PM Hits:587
|
06-02-2012 01:31 PM Hits:505
|
06-02-2012 02:05 PM Hits:331
|
.gif)
.jpg)
