பிராந்திய செய்திகள்
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு கடற்பரப்பில் அருகும் கடல் உணவுகள்
ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010 11:32
நெடுந்தீவு கடற்பரப்பில் தற்சமயம் கடல் உணவுப் பொருள்களின் உற்பத்தி வெகுவாகக் குறைந்து காணப்படுவதாகவும், இதனால் தொழிலுக்காகச் செல்லும் மீனவர்கள் வெறும் கையுடன் திரும்ப வேண்டியுள்ளதாகவும் நெடுந்தீவு மீனவர்கள் கூறுகிறார்கள்.
இதனால் தற்சமயம் நெடுந்தீவில் கடல் உணவுகளுக்குப் பலத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வட இலங்கைக் கடல் பிராந்தியத்தில் மீன் வளங்கள் அருகிவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், நெடுந்தீவு மீனவர்கள் தாங்கள் தினமும் பெரும் ஏமாற்றத்துடனேயே திரும்புவதாகவும் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படலாம் எனவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தினமும் பல நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப் படகுகள் இந்தப் பிராந்தியத்தில் நுழைந்து சிறிதும் பெரிதுமாக உள்ள கடல் வளங்களை அள்ளிச் சென்றதில் தற்சமயம் இப்பகுதிகளின் மீன் வளம் அருகிவிட்டதாகவும் மீனவர்கள் கூறுகிறார்கள்.

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1129
|
05-02-2012 08:00 PM Hits:681
|
.gif)
.jpg)
