திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

பஸ் மிதிபலகையில் பயணித்த பயணி தடுக்கி விழுந்து உயிரிழப்பு

(சரண்யா)

யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸின் மிதிபலகையில் நின்று  பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவர் கால் தடுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நுணாவில் மேற்கு சாவகச்சேரியை சேர்ந்த நமசிவாயம் ராசரட்னம் (வயது 58) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. நுணாவில் அறவொளி சனசமூகத்தடியில் குறித்த பஸ்ஸில் பயணித்த மற்றுமொரு பயணி இறங்கிய பின், குறித்த நபர் மீண்டும் பஸ்ஸில் ஏறுகையிலேயே இவ்வாறு தடுக்கி விழுந்து  படுகாயமடைந்தார்.

அவர் தலையில் காயமடைந்த  நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸின் சாரதி பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுணாவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 
 

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: