பிராந்திய செய்திகள்
மட்டக்களப்பு
சட்ட விரோத மின் பாவனையில் ஈடுப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது
திங்கட்கிழமை, 06 செப்டம்பர் 2010 08:36
(ஆர்.அனுருத்தரன்)
வாழைச்சேனை மின்சார சபை அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின் பாவனையில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
பேத்தாலை, விநாயகப்புரம, புதுக்குடியிருப்பு போன்ற கிராமசசேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இவாறு சட்ட விரோத மின்பாவனையில் ஈடுப்பட்டதான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். ம்
இன்று அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முற்றுகை நடவடிக்கையில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கும் அதேவேளை அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட மின் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று மாலை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1130
|
05-02-2012 08:00 PM Hits:682
|
.gif)
.jpg)
