பிராந்திய செய்திகள்
அம்பாறை
நகைக்கடை கொள்ளைகள் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் இருவர் கைது
ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010 12:06
(க.சரவணன்)
திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த மாதம் 26ஆம் திகதி இரவு மூன்று நகைக்கடைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதான இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தங்க நகைகள் பலவும் கைப்பற்றப்பட்டதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரணதுங்க தெரிவித்தார்.
கடந்த 26ஆம் திகதி, திருக்கோவில் பிரதான வீதியில் உள்ள மூன்று நகைக்கடைகளை உடைத்து 3 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் கைது செயப்பட்ட சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரிவித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1124
|
05-02-2012 08:00 PM Hits:680
|
.gif)
.jpg)
