வெளியேறியவர்களின் பெயர்களை யாழ். வாக்காளர்களை பட்டியலிருந்து நீக்க நடவடிக்கை
வியாழக்கிழமை, 29 ஜூலை 2010 15:02
(கெலும் பண்டார)
யாழ். மாவட்டத்தில் வாக்காளர்களாகப் பதியப்பட்டு, யுத்தம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியவர்களின் பெயர்களை 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின்படி, யாழ். மாவட்டத்தில் 720,000 பேர் வாக்காளர்களாக இருந்தனர். 2009 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இந்த எண்ணிக்கை 816,000 ஆக உயர்ந்திருந்தது. எனினும் இப்பட்டியலிலுள்ளோரில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி வாக்காளர்களில் தற்போது உண்மையாக யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 400,000 ஆக இருக்கலாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சரியான எண்ணிக்கையை தேர்தல் அதிகாரிகள் விரைவில் கண்டறிவர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆரச்சி டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார்.
வடக்கிலுள்ள மக்கள் மத்தியில் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்வதில் ஆர்வமில்லை எனவும் இது தொர்பாக அரசியல் கட்சிகளும் காத்திரமாகப் பங்காற்றவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிய இடங்களில் குடியேறிய மக்கள், தமது பழைய இடங்களிலுள்ள காணிகள் பறிபோய்விடும் என்ற அச்சம் காரணமாக வாக்காளர்களாக பதிவு செய்யத் தயங்குகின்றனர் எனவும் ரோஹன ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1092
|
05-02-2012 08:00 PM Hits:658
|
.gif)
.jpg)
