மேர்வின் சில்வா மீதான விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம்
திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010 19:28
(றிப்தி அலி)
முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தொடர்பாக நியமிக்கப்பட்ட ஒழுக்காற்றுக் குழுவின் இறுதி அறிக்கை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிடம் இன்று மாலை கையளிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் 'தமிழ்மிரர்' இணையத்தளத்திற்கு தெரிவித்தன.
முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா, களனி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டியதை விசாரிப்பதற்காக ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவினால் ஒழுக்காற்று குழு நியமிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோரிடமிருந்து பெற்ற அறிக்கை மூலமே இக்குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசேகரவை தலைவராகக் கொண்ட இக்குழுவில் ஓய்வு பெற்ற அரச அதிகாரி மஹிந்த சமரசேகர மற்றும் சட்டத்தரணி என்.எம்.சஹீட் ஆகியோர் உறுப்பினர்களாவர்.

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1092
|
05-02-2012 08:00 PM Hits:657
|
.gif)
.jpg)
