ஹஜ் வழிகாட்டி நூல் இன்று கையளிப்பு
செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010 00:50
(றிப்தி அலி)
சட்டத்தரணி என்.எம்.சஹீட்டினால் தயாரிக்கப்பட்ட ஹஜ் முகவர்களுக்கான வழிகாட்டி நூல் இன்று ஹஜ் குழு தலைவரும் மேல் மாகாண ஆளுநருமான அலவி மெளலானாவிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய ஹஜ் முகவர்களுக்கான வழிகாட்டி நூலை தயாரிப்பதற்காக சட்டத்தரணி என்.எம்.சஹீட்டை ஹஜ் குழு தலைவர் அலவி மெளலானா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நியமித்திருந்தார்.
இவ்வழிகாட்டி நூலில் ஹஜ் முகவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் எவ்வாறு அமைய வேண்டும், ஹஜ் முகவர்களாக செயற்படுவதற்கு எவ்வாறான தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும், ஹஜ் விவாகாரம் தொடர்பில் ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய விவகார திணைக்களம் எவ்வாறு செயற்பாட வேண்டும் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஹஜ் மருத்துவ குழுவின் பணிகள், அக்குழு ஹஜ் யாத்திரிகர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சேவைகள், ஹஜ் நிதி எவ்வாறு கையாளப்பட வேண்டும், ஹஜ்ஜுக்கான கட்டணங்கள் எவ்வாறு அறவிடப்பட வேண்டும் மற்றும் சகல தகுதிகளையும் கொண்ட ஹஜ் முகவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பவற்றை அடிப்படையாகக் இவ்வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்று ஹஜ் குழு தலைவர் அலவி மெளலானாவிடம் கையளிக்கப்படவுள்ள ஹஜ் முகவர்களுக்கான வழிகாட்டி மிக விரைவில் ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்காக கையளிக்கப்படவுள்ளது என ஹஜ் குழு முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1090
|
05-02-2012 08:00 PM Hits:657
|
.gif)
.jpg)

சம்பிரதாயத்துக்காக ஓரிரு கடமைகளைச் செய்தாலும் ஒவ்வொரு வருடமும் ஹாஜிகள் ஏமாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
இப்பிரச்சினைக்கு மனித வழிகாட்டல்கள் ஒருபோதும் தீர்வாகாது! மாற்றமாக அனைவரும் இறைவழிகாட்டலை ஏற்று அதனைப் பின்பற்றினாலே தீர்வு சாத்தியமாகும்.!!