போலி ஆவணங்கள் மூலம் அரச காணிகள் துஷ்பிரயோகம்
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 12:55
(காந்த்ய சேனநாயக்க )
தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு சபைகளின் பெயரில் போலியான முறையில் உறுதிப்பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, அரசாங்கத்திற்கு சொந்தமான பல ஏக்கர் காணிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை மோசடிப் புலனாய்வு பிரிவு மேற்கொண்டுவருகின்றது.
மோசடி புலனாய்வு பிரிவின் தகவல் படி, போலியான முறையில் உறுதிப் பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட காணிகள் பல,புத்தளம் மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்தகைய போலி உறுதிப்பத்திரங்களை சட்டத்தரணி ஒருவர் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு சபைக்கு அனுப்பிய போதே இந்நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்தது.
அரச காணிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அண்மையில் கவனம் செலுத்தியுள்ளது.
அரச காணிகளை பிழையான வழியில் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு என பொலிஸார் அறிவுறித்தப்பட்டள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1091
|
05-02-2012 08:00 PM Hits:657
|
.gif)
.jpg)
