அரசாங்கம், த.தே.கூட்டமைப்புடன் ஐ.தே.க. ஒத்துழைக்கும் : ரணில்
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 18:11
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஐக்கிய தேசிக் கட்சி ஒத்துழைக்கும் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இந்தியாவில் 'த ஹிந்து' பத்திரிகையின் செய்தியாளர்களுடன் உரையாடும்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.
'இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என நாம் விரும்புகிறோம். இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கம் ஆகியனவற்றுடன் நாம் ஒத்துழைப்போம்' என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
வடமாகாண சபைக்கான தேர்தலை எப்போது நடத்துவது என்பதைத் தீர்மானிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சம்பந்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை மாற்றமடைந்துள்ள தற்போதைய சூழ்நிலையில் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய விடங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
'மாறியுள்ள சூழ்நிலை குறித்து த.தே.கூ.வும் யதார்த்தபூர்வமாக இருக்க வேண்டும். அத்துடன் சில விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கும் தயாராக இருக்க வேண்டும்' என ரணில் கூறினார்.

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1090
|
05-02-2012 08:00 PM Hits:657
|
.gif)
.jpg)
