திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

இந்திய இராணுவ தளபதி விஜயகுமார் சிங் இன்று இலங்கை விஜயம்

 

இந்திய இராணுவத் தளபதி விஜயகுமார் சிங் உட்பட ஐவர் அடங்கிய குழுவொன்று, ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இன்று இலங்கை வருகிறது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அழைப்பினையேற்று வருகை தரும் அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், விமானப் படைத் தளபதி, கடற்படைத் தளபதி ஆகியோரைச் சந்தித்துப் உரையாடவுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் உயிர்நீத்த, இந்திய சமாதானப் படையினருக்காக பத்தரமுல்லை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஞாபகார்த்த தூபிக்குச் சென்று அவர் அஞ்சலி செலுத்துவாரென தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத் தலைமையகத்தில் விஜய குமார் சிங்கிற்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டும். இதனைத் தொடர்ந்து அவர் வவுனியாவுக்கும் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: