ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டால் அரசுடன் இணைவோம்: ஐ.தே.க. கிளர்ச்சிக்குழு
ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010 11:59
(இந்திக ஸ்ரீ அரவிந்த)
தமக்கெதிராக கட்சியில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அரசாங்கத்துடன் இணைந்துவிடுவோம் என அரசியலமைப்புத் திருத்த வாக்கெடுப்பின்போது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்த ஐ.தே.க அங்கத்தவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ல் குணசேகர இது தொடர்பாக கூறுகையில், ஐ.தே.க. அங்கத்தவர்கள் சிலர் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்தமையானது தனிநபர்கள் என்ற ரீதியில் தீர்மானம் மேற்கொள்வதற்கு கட்சியிலுள்ள ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
தமக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அதேபோன்ற நடவடிக்கை கரு ஜயசூரியவுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்த நான்கு சிரேஷ்ட அங்கத்தவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஐ.தே.க. பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கடந்தவாரம் டெய்லி மிரருக்குத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1090
|
05-02-2012 08:00 PM Hits:657
|
.gif)
.jpg)
