ஆலயங்களை பாதுகாப்பதற்கு புலம்பெயர்ந்த மக்கள் உதவ வேண்டும்:யோகேஸ்வரன் எம்.பி
ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010 20:28
.jpg)
(ராக்கி)
பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் 13 ஆம் ஆண்டு சைவ மாநாடு நேற்று சனிக்கிழமை மாலை ஆச்வே உயர்வாசற்குன்று முருகன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டை சிறப்பிக்க தமிழ்நாட்டிலிருந்து பழனி ஆதினம் தவத்திரு சாது சண்முக அடிகளாரும், பேராசிரியர் ஆர்.கோபாலகிருஷ்ணனும், இலங்கையிலிருந்து இன்சொல் வாரிதி கே.பாலசண்முகனும் கலந்து கொண்டனர்.
“சைவநெறியும் உலக அமைதியும்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற சைவ மாநாட்டில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இம்மாநாட்டில் உரையற்றிய அவர்,
வடக்கு கிழக்கு மாகாணங்களில் சைவத்தின் இன்றைய நிலையை விரிவாக விளக்கினார். நூறு ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட நமது பெருமைமிக்க சைவ ஆலயங்கள் இன்று பௌத்த கோயில்களாக மாற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக எல்லைக் கிராமங்களில் உள்ள சைவ ஆலயங்கள் படிப்படியாக பௌத்த கோவில்களாக மாற்றப்படக்கூடிய அபாயமுள்ளது.
ஒரு கோயிலை புனரமைப்பு செய்ய ஒரு புலம்பெயர் குடும்பம் உதவினால் நாம் எமது பாரம்பரிய நிலங்களையும், பண்பாடுகளையும் ஓரளவு காப்பாற்றலாம் என்ற இன்றைய யதார்த்த நிலையை நாம் ஒவ்வொருவரும் உணர்வது இன்றைய காலத்தில் தமிழரின் இருப்புக்கு பிரதானமானதாகும்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல இல்லங்களுக்கு புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வழங்கிவரும் உதவியை அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். உதவி செய்த தனிப்பட்டவர்களினதும் நிறுவனங்களினதும் பெயர்களையும் அவர் கூறினார்.
யுத்தத்தின்போது கையில் 5 சதம் இல்லாமல் மக்கள் அலைந்தபோது, புலம்பெயர் மக்களாகிய நீங்கள் செய்த உதவியும் அனுப்பிய பணமும்தான் அவர்களுக்கு ஓரளவு ஆறுதலைக் கொடுத்தது. தாயக புத்துயிர் ஆக்கத்தில் உங்களின் உதவி எங்களின் மண்ணிற்கு என்றும் தேவை எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாநாடு லூசியம் எனும் இடத்திலுள்ள சிவன்கோவில் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்விலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உரையாற்ற உள்ளார்.
.jpg)

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1091
|
05-02-2012 08:00 PM Hits:657
|
.gif)
.jpg)
