பிரதான விளையாட்டு
தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்காக வீட்டில் பயிற்சி எடுக்கும் மாணவி
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 16:32
(யூ.எல்.மப்றூக்_
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் முதலாமிடத்தைப் பெற்ற துறைநீலாவணை மகாவித்தியாலய மாணவி அ.இலக்கிய வீணா, தேசிய ரீதியிலான போட்டியில் கலந்து கொள்வதற்குரிய பயிற்சிகளை மேற்கொள்வதற்குரிய முறையான வசதிகள் எவையும் தன்னிடம் இல்லை என கவலை தெரிவிக்கின்றார்.
17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் நிகழ்ச்சியில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவி இலக்கியவீணா, முறையான பயிற்சிகள் எவையுமின்றியே கிழக்கு மாகாண மட்டத்தில் வெற்றியினை ஈட்டிக் கொண்டதாக "தமிழ்மிரருக்குத்" தெரிவித்தார்.
கோலூன்றிப் பாய்வதற்கான விளையாட்டு உபகரணங்கள் எவையும் இந்த மாணவியின் பாடசாலையில் இல்லாததால், இவரே உபகரணங்களைத் தயாரித்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இதேவேளை, மைதானங்கள் எவையும் இவருடைய சூழலில் இல்லாததால், கிழக்கு மாகாண போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னர், இந்த மாணவி தனது வீட்டிலேயே பயிற்சியில் ஈடுபடுவதாக கூறினார்.
இவர் இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளார்
இலக்கிய வீணா கல்வி கற்கும் துறைநீலாவணை மகாவித்தியாலயம், மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்தில் அமைந்துள்ளது.
.jpg)

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1112
|
05-02-2012 08:00 PM Hits:671
|
.gif)
.jpg)
