திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

இலங்கை வீரருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபை குற்றச்சாட்டு

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்புப் பிரிவு, கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியிலிருந்து இலங்கை அணி வீரர் ஒருவரின் நடவடிக்கை தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருகிறது.

சட்டவிரோத சூதாட்ட முகவர் என சந்தேகிக்கப்படும் ஒருவருடன் இரவு நேரத்தில் அதிகம் பழகிவந்ததையிட்டு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரிலேயே குறித்த வீரர் கண்காணிக்கப்படுவதாக தி கார்டியன் பத்திரிகை  செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கிரிக்கெட் சபையின் ஊழலுக்கெதிரான பிரிவினால் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார சங்கக்காரவிடம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி வீரர் குறித்து இலங்கை  பொலிஸார் விசாரணை நடத்தினர்.  குறித்த வீரர் மீது குற்றம் சுமத்தப்படவில்லை. எனினும், இவ்விசாரணையின் முன்னேற்றமின்மை குறித்து  ஊழலுக்கெதிரான பிரிவு அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, ஐ.சி.சியின் பிரதம நிறைவேற்றதிகாரி ஹாருன் லோகார்ட் இவ்விடயத்தில் தனது பொதுவான ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். "ஊழல் எதிர்ப்புப் பிரிவின் செயற்பாடு பொலிஸை போன்றதோ அல்லது பத்திரிகைகளைப் போன்றதோ அல்ல. முற்றுகைகளையோ கைதுகளையோ மேற்கொள்வதற்கு எமக்கு அதிகாரம் எதுவுமில்லை" என அவர் கூறியுள்ளார்.

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: