ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010
தொடர்பு  | English | සිංහල

ஒழுங்கை மீறிய பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பாதசாரிகளுக்கான கடவையைப் பயன்படுத்துமாறு தம்மை அறிவுறுத்திய போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை திட்டிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் குறித்து கண்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


சிவிலுடையில் இருந்த மேற்படி இன்ஸ்பெக்டர், கண்டி தலதா வீதியில் பாதசாரிகளுக்கான கடவையை பயன்படுத்தாமல் வேறு இடத்தில் வீதியைக் கடக்க முற்பட்டாராம்.

அப்போது பாதசாரிகளுக்கான கடவையைப் பயன்படுத்துமாறு போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அறிவுறுத்தியபோது, அவரை தகாத வார்த்தைகளால் இன்ஸ்பெக்டர் திட்டினாராம்.


இந்நிலையில், குறித்த இன்ஸ்பெக்டருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 

Comments (1)கருத்து
...
written by rama, July 29, 2010
பிரதிப் போலீஸ் மா அதிபர் பூஜித்த wijesinhawaa ? அல்லது பூஜித்த jayasundarawaa ? தயவு செய்து சரி பார்க்கவும்

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திட்காக இலங்கை என்று type செய்யவதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy