ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010
தொடர்பு  | English | සිංහල

5 ஆவது இரட்டைச் சதம் குவித்தார் சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 5 ஆவது டெஸ்ட் இரட்டை சதத்தை இன்று பூர்த்தி செய்தார்.

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆவது நாளான இன்று டெண்டுல்கர் 203 ஓட்டங்களைப் பெற்றார்.

347 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸர் மற்றும் 23 பௌண்டரிகளையும் விளாசினார்.

இலங்கை மண்ணில் இரட்டைச் சதம் பெற்ற 4 ஆவது வெளிநாட்டு வீரர் டெண்டுல்கர் ஆவார். இதற்குமுன் ஸ்ரீபன் பிளெமிங் (274) பிரையன் லாரா (221) வீரேந்தர் ஷேவாக் (201) ஆகியோர் ஏற்கெனவே இலங்கையில் இரட்டைச் சதங்களைப் பெற்றுள்ளனர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 642  ஓட்டங்களைப் பெற்றநிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டிருந்தது.
இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் சற்று முன்னர் மேற்படி இலக்கை கடந்தமை குறிப்பிடத்தக்கது.


 

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திட்காக இலங்கை என்று type செய்யவதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy