திங்கட்கிழமை, 06 செப்டம்பர் 2010
தொடர்பு  | English | සිංහල

பாரிய விண்கல்லினால் பூமிக்கு பேராபத்து!

 

பிரமாண்டமான விண்கல்லொன்று 2182ஆம் ஆண்டு பூமியுடன் மோதவுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். 1999 RQ36 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இவ்விண்கல் பூமியுடன் மோதுவதற்கான சந்தர்ப்பம் 1000இல் ஒன்று என்ற நிகழ்தகவில் காணப்படுவதாகவும் அவ்விஞ்ஞானிகள் மேலும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

1999 RQ36 விண்கல்லானது 2182ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் திகதி பூமியுடன் மோதுவதற்காக சாத்தியக் கூறுகள் அதிகமாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 1800 அடி நீளமான இந்த விண்கல் பூமியுடன் மோதுண்டால் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும். மேக்ஸிக்கோவின் Chicxulub கிடங்கினை உருவாக்கிய விண்கல் மோதலானது பூமியில் பாரிய சுனாமி போன்ற அனர்தத்தினை ஏற்படுத்தியிருக்கும். அந்த விண்கல் மோதல்தான் டைனோஸர் போன்ற விலங்கினங்களின் அழிவுக்கும் காரணமாக அமைந்திருந்தது. அதைவிட பாரிய அழிவினை 1999 RQ36 விண்கல் ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விண்கற்கல் சூரிய சக்தியினை உள்வாங்கி மீண்டும் அந்த சக்தியை கதிர்ப்பு செய்வதால் விண்கற்களில் பாதைகள் மாறுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன எனவும் விஞ்ஞானிகள் ஆறுதல் கூறுகின்றனர்.

எது எப்படியிருப்பினும் இந்த பாரிய விண்கல்லானது தற்பொழுது பூமியின் பின்னால் இருப்பதால் 2011ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் அதனை விஞ்ஞானிகளால் அவதானிக்க முடியுமாம்.

1999 RQ36 விண்கல்லின் பாதையினை மாற்றவேண்டுமானால் 100 வருடங்களுக்கு முன்பாகவே அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். ஆகையினால் அணுகுண்டுகளை காவிச்செல்லும் விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

 

Comments (3)கருத்து
...
written by Ossan Salam - Qatar, July 29, 2010
நல்ல வேளை இப்பொழுது உயிருடன் உள்ள எவரும் அந்த பாரிய அழிவு பற்றிக் கூறக்கூடிய காலகட்டத்தில் உயிருடன் இருக்கவே மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்..... அந்தக் கல் வீழ்ந்தாலும் விழாவிட்டாலும் நிச்சயமாக இந்த உலகை ஒருநாள் எல்லாம் வல்ல இறைவன் அழித்தே தீருவான் !!!!
...
written by ishrath muhammad, August 01, 2010
குல்லு நப்ப்சின் சஹிகதுள் மௌத். ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே ஆகனும், அதே போல் இந்த உலகமும் ஒரு நாள் அழிந்தே தீரும். அழிவது வெகு தூரம் இல்லை. (அல்லாஹு அஹ்லம்.)
...
written by Unmai, August 12, 2010
விஞ்ஜானிகள் மிகவும் திறமைசாலிகள் , இக்கல்லானது பூமி உடன் மோதினாலும் மோதவிட்டலும் காரணம் கூறுவார்கள்.இதுஎல்லாம் மனிதனின் சிந்தனைக்கு அப்பால்பட்டது . எல்லாம் இறைவன் உடைய செயல் . (கலாநிதி மாணவன் )

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திட்காக இலங்கை என்று type செய்யவதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy