திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் இந்துவிழி சஞ்சிகை வெளியீடு

 


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் இந்துவிழி சஞ்சிகை வெளியீடும் அறநெறி விருத்திப்போட்டி பரிசளிப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.

மன்றத்தின் தலைவர் எம்.பவளகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.பவளகாந்தன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு மாவட்ட கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சிதமூர்த்தி, வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் மன்றத்தினால் நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான அறநெறி விருத்திப்போட்டி பரிசளிப்பு நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலையங்களைச் சேரந்த பாடசாலை மாணவர்கள் மாணவர்கள் பரிசில்களைப் பெற்றுக்கொண்டனர்.

Views: 1671

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.