'திட்டமிடல் மூல தத்துவங்கள்' நூல் வெளியீட்டு நிகழ்வு
26-04-2012 11:13 AM
Comments - 0       Views - 485

(ஹேமந்த்)

கிளிநொச்சி மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரனின் 'திட்டமிடல் மூல தத்துவங்கள்' என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று புதன்கிழமை கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

திட்டமிடற் பணிப்பாளர் க.மோகனபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், யாழ்ப்பாணப் பல்லைக்கழக்கத்தின் பொருளியில் துறைப் பேராசியர் நந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா, முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தி.இராசநாயகம் ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்."'திட்டமிடல் மூல தத்துவங்கள்' நூல் வெளியீட்டு நிகழ்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty