.
வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014

'இனி வீசட்டும் தென்றல்' சித்திரைக் கவியரங்கு


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

'இனி வீசட்டும் தென்றல்' என்ற தலைப்பில் இளம் கவிஞர்களின் சித்திரைக் கவியரங்கு நேற்று சனிக்கிழமை மாலை பாண்டிருப்பில் நடைபெற்றது.

பாண்டிருப்பு அகரம் சமூக அமையத்தின் ஏற்பாட்டிலும் அதன் தலைவர் எஸ்.துஷ்யந்திரனின் வழிகாட்டலிலம் பாண்டிருப்பிலுள்ள  இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இக்கவியரங்கு நடைபெற்றது.

கவிஞர் அக்கரைப்பாக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மூத்த கவிஞரும் ஓய்வுபெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளருமான மு.சடாச்சரம் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.Views: 1092

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.